A selection of drawings and paintings by Keshav
துளபமணிமாலை மகுடத்துஇடை மிளிர் மயில்பீலிஅளப்பரிய அருள்பொழியும் அகன்ற கருவிழிகள்நீலவண்ண நுதல் அழகு சேர்க்கும் சிந்தூர திலகம்புலரும் மலர் ஒக்கும் தேன்சிந்தும் மென் இதழ்திருமார்பில் துவளும் துழாய்மாலை ஒருகரம் பற்றதிருவடியில் தன்னை அர்ப்பணித்து பெருந்துயில்ஆழ்ந்த பாவைப் பரிவுடன் தழுவும் மற்றொரு கரம்அமுதப்பொருளாம் அவனடிபற்றும் அண்டினோர்க்குஇன்னமுதாம் சொர்க்கம் யாதெனக் காட்டும் மடித்தகோலம்ஏதுமறியா வெளிநின்ற நோன்பு நோறகும் கோதைக் குழாம்சூதறியா அவள் மௌனம் சங்கையுற்று அழைப்பார்இலங்கைகோன் இளையோனிடம் தோற்ற துயில்ஒயிலாய் படுத்திருக்கும் உன்னை அண்டியதோ?ஓலமிட்டு ஓதும் அவன் நாமம் கேட்டிலையோ?வாயில் திறவாய் எங்களொடு சேருவாய் அருங்கலமே !
Post a Comment
1 comment:
துளபமணிமாலை மகுடத்துஇடை மிளிர் மயில்பீலி
அளப்பரிய அருள்பொழியும் அகன்ற கருவிழிகள்
நீலவண்ண நுதல் அழகு சேர்க்கும் சிந்தூர திலகம்
புலரும் மலர் ஒக்கும் தேன்சிந்தும் மென் இதழ்
திருமார்பில் துவளும் துழாய்மாலை ஒருகரம் பற்ற
திருவடியில் தன்னை அர்ப்பணித்து பெருந்துயில்
ஆழ்ந்த பாவைப் பரிவுடன் தழுவும் மற்றொரு கரம்
அமுதப்பொருளாம் அவனடிபற்றும் அண்டினோர்க்கு
இன்னமுதாம் சொர்க்கம் யாதெனக் காட்டும் மடித்தகோலம்
ஏதுமறியா வெளிநின்ற நோன்பு நோறகும் கோதைக் குழாம்
சூதறியா அவள் மௌனம் சங்கையுற்று அழைப்பார்
இலங்கைகோன் இளையோனிடம் தோற்ற துயில்
ஒயிலாய் படுத்திருக்கும் உன்னை அண்டியதோ?
ஓலமிட்டு ஓதும் அவன் நாமம் கேட்டிலையோ?
வாயில் திறவாய் எங்களொடு சேருவாய் அருங்கலமே !
Post a Comment