Dec 25, 2015

9. Madhava : #Tiruppavai #krishnafortoday 

1 comment:

Kalpakam said...


மறுவற்ற திருமேனி ஒளிரும்
மாசற்ற ஞானதீபம் சூழ்ந்த
நறுமண தூபம் எங்கும் கமழும்
மலர்படுக்கை துயில் பாவையே

கேட்கும் தன்மை இழந்ததா உன் செவிகள்
ஆட்கொண்டதா உம்மை மீளா உறக்கமயக்கம்?

பண்டொருநாள் கரிமுகன் அறைகூவிய ஹரிநாமம்
வீணர்கள் கொடுமையால் நடுசபையில் துயில்நீக்கிய
பேதை கூவி அழைத்த நாயகன் நாமம் இன்று
பாவையர் குழாம் இசைக்க நீ கேட்டிலையோ ?
ஆயிரம் நாமமுடையோன் வைகுந்தவாசன்
பாசுரம் பாடி அகமகிழ்வோம் எழுவாயாக !