Jan 1, 2018

Tiruppavai 15 - Being the devotee of the devotee of Krishna.
#watercolour #KrishnaforToday



1 comment:

Kalpakam said...

கிள்ளைப் பிள்ளைக் கூட்டங்களே
துள்ளி இங்கு கூடுங்கள்
பாவையர் ஏசும் பேச்சுக்களை
செவியுற்று பகிர்வோம் நம்மிடை

" உறக்கம் விட்டெழுந்திராய்-நங்காய்
பொய்யுரைகள் கேட்டு அலுத்தோம்

கூடினோம் யாவரும் கோவிந்தனைப்பாட
வாயிற்வெளி வந்து நேராய் நோக்குவாய்

குவலபீடகரிமுக அசுரனை அழித்து
குவலயம் மகிழ்வுறச் செய்தவனை
குவலயம் காக்க தன் சிறுவிரலால்
கோவர்த்தனம் ஏந்தி நின்றவனை
குவலயத்து இடர்கள் இழைத்த ஈனன்
இலங்கை கோன் அழித்தொழித்தவனை
உவகை உள்ளமோடு பூரித்த எங்களுடன்
புவனங்கள் அறியப் பாடி மகிழச் சேருவாய் "

நெகிழ்ந்தோம் -நெஞ்சம் நெகிழ்ந்தோம்
மகிழ்ந்தோம் உளமார மகிழ்ந்தோம்
குழாமாய் கூடிய நாங்களும்- குரிசிலின்
புகழ் செயல்களைக் கேட்டு மகிழ்ந்தோம்