காலம் கரைந்துறையும்-- உன் கானம் செய்யும் ஜாலம்-- என் காதில் ஒலிக்கும் விந்தை என் சொல்வேன் கண்ணா
ஞாலமே சுழன்று தொழுதுள்ளம் நெகிழும் மாலன் உந்தன் லயமிகு இசை கேட்டு
சோலைத்தரு அடியில் எங்கள் ஆநிரை குழாமுடன் கோலாகல பாலனாய் வேய்ங்குழல் இசைத்தாய் அன்று மாலை மதியொளியில் வாலைக்குமரிகளொடு கோகுலக்கண்ணனாய் கீதத்தில் குதூகலித்தாயன்றோ ?
1 comment:
காலம் கரைந்துறையும்-- உன்
கானம் செய்யும் ஜாலம்-- என்
காதில் ஒலிக்கும் விந்தை
என் சொல்வேன் கண்ணா
ஞாலமே சுழன்று தொழுதுள்ளம் நெகிழும்
மாலன் உந்தன் லயமிகு இசை கேட்டு
சோலைத்தரு அடியில் எங்கள் ஆநிரை குழாமுடன்
கோலாகல பாலனாய் வேய்ங்குழல் இசைத்தாய் அன்று
மாலை மதியொளியில் வாலைக்குமரிகளொடு
கோகுலக்கண்ணனாய் கீதத்தில் குதூகலித்தாயன்றோ ?
உன் நான்மறை நாதம்
வானம் வரைத் தொடும்
புன்மை அறவே தீர்த்து
புனிதம் சேர்க்கும் பிறவியில்
Post a Comment