"அச்சம் தவிர்" என் அபயம் காட்டும் செந்தாமரை இதழ்மென் வலக்கரம் இச்சையுடன் இதமாய்த் தடவும் வெண்சக்கரம் முத்திரை இடக்கரம்
கண்டேன் அண்ணலே உன் திருக்கோலம் விண்டேன் என் மகிழ்வை பால் பொழிந்து சாந்தம் குடிகொண்ட எழில் முகமதனில் காந்தமாய் ஈர்க்கும் இரு பெருவிழிகள் மூடிய நிலைமாறி சற்றே பரிவாய்த்திறந்து வாடிநிறகும் என்னைப் பாராயோ பெம்மானே?
1 comment:
நீல வண்ண அழகன் அவன்
நுதல் நடு மிளிர் பசுந்திலகம்
இலங்கும் மணிக் குண்டலங்கள்
மழலைக் கொஞ்சும் செவ்விதழ்
துகிலாய்ப் போர்த்திய் துழாய் மாலை
அகிலத்து அரசி இதயத்துள் வாசம்
முகில் வண்ணத் திண் தோள்களில்
சுகமாய்ப் பதித்த நாக கங்கணங்கள்
"அச்சம் தவிர்" என் அபயம் காட்டும்
செந்தாமரை இதழ்மென் வலக்கரம்
இச்சையுடன் இதமாய்த் தடவும்
வெண்சக்கரம் முத்திரை இடக்கரம்
கண்டேன் அண்ணலே உன் திருக்கோலம்
விண்டேன் என் மகிழ்வை பால் பொழிந்து
சாந்தம் குடிகொண்ட எழில் முகமதனில்
காந்தமாய் ஈர்க்கும் இரு பெருவிழிகள்
மூடிய நிலைமாறி சற்றே பரிவாய்த்திறந்து
வாடிநிறகும் என்னைப் பாராயோ பெம்மானே?
Post a Comment