இமையோரின் இடர்களைய, வரும் முன் விரைந்தேகி வினைதீர்க்கும் வரதா துயிலெழாய்
தீனக்குரலாய் உன் நாமம் செவியுற்று துடித்த கரிமுகன் கஜேந்திரன் துயர் நீக்க ஆதிமூலனாய் அன்று உன் சுழலும் சக்கரம் சடுதியில் முதலைவாய் கிழித்து ஒழித்ததன்றோ கனிந்துருகி உம்மையே கருத்தில் இருத்தி நோன்பிருந்துபாடும் எங்களை நோக்குவாயாக
துயில் துறந்து விழிமலர்ந்து எம்மைக் காண புறப்பற்றுஅகப்பற்று மாசு அகற்றும் விசிறியும் சுயவுரு ஞானஒளி பிரதிபலிக்கும் ஆடியும்தந்து சிறு துடி இடை எழிலுருவே செவ்விதழ் அழகியளே தேய்தலிலா பக்தியோடு காத்திருக்கும் எங்களுடன் பெருமானை உம் மணவாளனை சேர்ப்பாயாக !
1 comment:
இமையோரின் இடர்களைய, வரும் முன்
விரைந்தேகி வினைதீர்க்கும் வரதா துயிலெழாய்
தீனக்குரலாய் உன் நாமம் செவியுற்று
துடித்த கரிமுகன் கஜேந்திரன் துயர் நீக்க
ஆதிமூலனாய் அன்று உன் சுழலும் சக்கரம்
சடுதியில் முதலைவாய் கிழித்து ஒழித்ததன்றோ
கனிந்துருகி உம்மையே கருத்தில் இருத்தி
நோன்பிருந்துபாடும் எங்களை நோக்குவாயாக
துயில் துறந்து விழிமலர்ந்து எம்மைக் காண
புறப்பற்றுஅகப்பற்று மாசு அகற்றும் விசிறியும்
சுயவுரு ஞானஒளி பிரதிபலிக்கும் ஆடியும்தந்து
சிறு துடி இடை எழிலுருவே செவ்விதழ் அழகியளே
தேய்தலிலா பக்தியோடு காத்திருக்கும் எங்களுடன்
பெருமானை உம் மணவாளனை சேர்ப்பாயாக !
Post a Comment