விழித்து அருணன் எழும் முன் கோழிகள் கூவல் கேட்கவில்லையா? மாடத்துப் பந்தலில் வட்டமிடும் கூட்டமாய்க்குயில் எழுப்பும் ஒலி தவசிகளின் மறைநாதமாய் செவியேற்கவில்லையா?
நறும் மணம் கமழ் நீண்ட கருங்கூந்தல் எழிலரசியே ! அன்றலர் செங்கமல இதழ் போன்ற சிலிர்க்கும் வளையல் குலுங்கும் மென் கரங்களால் வாயில் கதவம் திறப்பாய் எம்மோடு கலந்து உவந்து உம்மை என்றும் பிரியாதவ்ன் மேன்மை பாடிமகிழ்வோமாக !
1 comment:
களிப்பூறும் மிகு கேளிக்கையாய்
பிளிரும் வாரணம் அடக்குபவனாய்
கண்ணனைக் காக்கும் கவசமாய்
திண்தோள்கள் உடையவனான
நந்தகோபன் மருமகள் நங்காய் !
விழித்து அருணன் எழும் முன்
கோழிகள் கூவல் கேட்கவில்லையா?
மாடத்துப் பந்தலில் வட்டமிடும்
கூட்டமாய்க்குயில் எழுப்பும் ஒலி
தவசிகளின் மறைநாதமாய்
செவியேற்கவில்லையா?
நறும் மணம் கமழ் நீண்ட
கருங்கூந்தல் எழிலரசியே !
அன்றலர் செங்கமல இதழ்
போன்ற சிலிர்க்கும் வளையல்
குலுங்கும் மென் கரங்களால்
வாயில் கதவம் திறப்பாய்
எம்மோடு கலந்து உவந்து
உம்மை என்றும் பிரியாதவ்ன்
மேன்மை பாடிமகிழ்வோமாக !
Post a Comment