தூதுவராய் போனீர் சபைக்கு அன்று தீயோருக்கு பெரு உரு காட்டினீர் மண் உண்ணத் தடுத்த அன்னைக்கு அன்று எண்ணிலடங்கா அகிலம் காட்டினீர் சமரில் ஒதுங்கிநின்ற பார்த்தனுக்கு அன்று அமரத்துவ வடிவு யாதெனக் காட்டினீர் கடலென யமுனை நடுவில் அன்று படமெடுத்த அரவம் ஒடுக்க ஆட்டம் காட்டினீர் இந்திரன் சினந்த தருணம் அன்று கோவர்தனமலை ஏந்தி காட்சி காட்டினாய் பதுமையென ஏன் நின்றீரோ இன்று ஆநிரை காக்கும் இனிய மாயனே வனிதை எழிலரசி ராதாவின் வரவைக் காத்து நின்றீரோ இனறு
1 comment:
தூதுவராய் போனீர் சபைக்கு அன்று
தீயோருக்கு பெரு உரு காட்டினீர்
மண் உண்ணத் தடுத்த அன்னைக்கு அன்று
எண்ணிலடங்கா அகிலம் காட்டினீர்
சமரில் ஒதுங்கிநின்ற பார்த்தனுக்கு அன்று
அமரத்துவ வடிவு யாதெனக் காட்டினீர்
கடலென யமுனை நடுவில் அன்று
படமெடுத்த அரவம் ஒடுக்க ஆட்டம் காட்டினீர்
இந்திரன் சினந்த தருணம் அன்று
கோவர்தனமலை ஏந்தி காட்சி காட்டினாய்
பதுமையென ஏன் நின்றீரோ இன்று
ஆநிரை காக்கும் இனிய மாயனே
வனிதை எழிலரசி ராதாவின்
வரவைக் காத்து நின்றீரோ இனறு
Post a Comment