Jan 12, 2016

27.  SAyujya. BrahmAnubhavam.  #Tiruppavai #krishnafortoday 

2 comments:

Kalpakam said...

உம் திறல் கண்டார் தெவ்வர்
உம் உறவு கண்டார் உத்தமர்
உம் அருள் கண்டார் ஐவர்
உம் கருணை கண்டார் தேவர்

ஆநிரை ஆய்ச்சியர்குழாம் நாங்கள்
நிகரில்லா உம் தோழமை கண்டோம்

கழலடி பணிந்தெழுந்த கைகள்
எழில்மிகு கங்கணம் அணியட்டும்
நினைவையே சுமந்த தோள்கள்
புதினமான கங்கணம் அணியட்டும்
இன்னமுத குழலோசை ஏற்ற செவி
வண்ண மணி குண்டலம் அணியட்டும்
நோன்பில் நலிந்த எங்கள் மேனி
பொலியும் புத்தாடை உடுத்தட்டும்

மயில்பீலி அசைய நிமிர்ந்த நடைபோட்டு
கயல்விழி நப்பின்னையுடன் இணைவீர்
பொங்கலமுது நெய்யுருகப் படைத்து
எங்கும் மங்களம் வேண்டி அருந்துவோம்

keshav keshav said...

Mikka nandri. Arpudam.