நெஞ்சகத்தே உம்மை-மாலே வஞ்சமில்லா உணர்வோடு தாசனாய் அடைந்தோர்க்கு வாசம் உம் இதயம் கவசமன்றோ?
செங்கமல மலர் எழு திருமகள் நீலவண்ணா உம் எழிலுரு கண்டு திங்கள் தண்ணொளி நிகர்பொலிய மணிவண்ணா உறைந்தாள் நிலையான அரியாசனமாக உம் மார்பில் அன்றோ ?
ஆதவன் விழிக்குமுன் சேர்ந்து புனித நீராடினோம் தண்புனலில் நடந்தோம் முன்னோர்கள் நன்கு தடம் பதித்த அறநெறிப்பாதையில்
உம் வெண்சங்கின் வேதநாதம் ஒலி மீட்கட்டும் எம் அறியாமை உறக்கமதை ஆலிலை பள்ளிகொண்டீர்-மேதினியில் சூதில் நீர் செய்த லீலைகள் அறிவோம் !!
வலம் வரும் எங்கள் அணிவகுப்பு மங்கலப் பல்லாண்டு பாடித்தொடர வழி நடத்த விளக்கேந்தி,பறை கொட்ட வழிதவறா எம் நோன்பு யாவரும் அறிய தோழியருடன் பதாகைகள் கைபிடித்து சூழ் பனியிலிருந்து காக்கும் பந்தலின் கீழ் தூயநதி யமுனைக்கரை சேர்ந்திசைத்து வாயார வாழ்த்தி மனமார அருளு வீராக
1 comment:
நெஞ்சகத்தே உம்மை-மாலே
வஞ்சமில்லா உணர்வோடு
தாசனாய் அடைந்தோர்க்கு
வாசம் உம் இதயம் கவசமன்றோ?
செங்கமல மலர் எழு திருமகள்
நீலவண்ணா உம் எழிலுரு கண்டு
திங்கள் தண்ணொளி நிகர்பொலிய
மணிவண்ணா உறைந்தாள் நிலையான
அரியாசனமாக உம் மார்பில் அன்றோ ?
ஆதவன் விழிக்குமுன் சேர்ந்து
புனித நீராடினோம் தண்புனலில்
நடந்தோம் முன்னோர்கள் நன்கு
தடம் பதித்த அறநெறிப்பாதையில்
உம் வெண்சங்கின் வேதநாதம் ஒலி
மீட்கட்டும் எம் அறியாமை உறக்கமதை
ஆலிலை பள்ளிகொண்டீர்-மேதினியில்
சூதில் நீர் செய்த லீலைகள் அறிவோம் !!
வலம் வரும் எங்கள் அணிவகுப்பு
மங்கலப் பல்லாண்டு பாடித்தொடர
வழி நடத்த விளக்கேந்தி,பறை கொட்ட
வழிதவறா எம் நோன்பு யாவரும் அறிய
தோழியருடன் பதாகைகள் கைபிடித்து
சூழ் பனியிலிருந்து காக்கும் பந்தலின் கீழ்
தூயநதி யமுனைக்கரை சேர்ந்திசைத்து
வாயார வாழ்த்தி மனமார அருளு வீராக
Post a Comment