தண்டை அணி கழல்கள் பணிந்தேன் ஆகுலம் தீர்க்கும் ஆயர் குலத்தோனே மணம் கமழ் மலர் கொண்டு பூசித்தேன் கோகுலம் காக்கும் சீர்மிகு கோவிந்தா தூயநல் இதயமோடு இசைதேன் பாசுரம் தூய யமுனைவாசி கோபியர் நேசனே மருளகற்றும் மாதவா-மக்கள் மாயை மயக்கம் இருளழித்து வழிகாட்டி, தொல்வினை தீர்த்து செய்பிழை பொறுத்து அமைதி உளமதில் நாட்டி நேயமுடன் நீளுலகத்து அறம் காக்க வருவாய்
1 comment:
தண்டை அணி கழல்கள் பணிந்தேன்
ஆகுலம் தீர்க்கும் ஆயர் குலத்தோனே
மணம் கமழ் மலர் கொண்டு பூசித்தேன்
கோகுலம் காக்கும் சீர்மிகு கோவிந்தா
தூயநல் இதயமோடு இசைதேன் பாசுரம்
தூய யமுனைவாசி கோபியர் நேசனே
மருளகற்றும் மாதவா-மக்கள் மாயை மயக்கம்
இருளழித்து வழிகாட்டி, தொல்வினை தீர்த்து
செய்பிழை பொறுத்து அமைதி உளமதில் நாட்டி
நேயமுடன் நீளுலகத்து அறம் காக்க வருவாய்
Post a Comment