Tiruppavai 12 #watercolour #KrishnaforToday — Priority of Service - Why Rama is delightful. The affection towards Bharatha. The grace to Ravana in the battlefield when he was unarmed and his chariot broken.
இசைக்கும் பாவையரின் குரல் கேட்டேன் திசை நோக்கி காட்சி கண்டேன்- கிளிக்கூட்டமுடன் "ஆசாரியர் அருள் பொழிவு போல் வெள்ளமாய் பால் சொரியும் எருமை அடியார் இதயதாபம் குளிர்ந்தது போல் வெள்ளமாய் நனைந்த வீடுமனைகள் உடைய நற்செல்வன் எழிலனின் உடன்பிறப்பே ! பெம்மான் பக்தருக்கு இறங்கி வருவதுபோல் வெள்ளமாய் சிரசில் விழும் பனித்துளிகள் குருவினுடைய உபதேச ஆசிகள் போல் வெள்ளமாய் தரையில் பால் ஓட்டம் உடைய உம் வாசற்கதவை அடைந்தோம் நிராயுதனான இலங்கை கோனிடம் கருணை இளையோன் பரதனிடம் நெஞ்சார்ந்த அளப்பறிய அன்பும் கொண்ட மனதுக்கினியானை களிப்புடன் பாடியும் உறக்கம் விடவில்லையா ? பெருந்துயில் விட்டு எம்முடன் சேருவாயாக " பெரிதுவந்தோம் -பெரிதுவந்தோம் கிளிகள் நாங்கள் அயோத்திராமன் மகிமை கேட்டு !!
1 comment:
இசைக்கும் பாவையரின் குரல் கேட்டேன்
திசை நோக்கி காட்சி கண்டேன்- கிளிக்கூட்டமுடன்
"ஆசாரியர் அருள் பொழிவு போல்
வெள்ளமாய் பால் சொரியும் எருமை
அடியார் இதயதாபம் குளிர்ந்தது போல்
வெள்ளமாய் நனைந்த வீடுமனைகள்
உடைய நற்செல்வன் எழிலனின் உடன்பிறப்பே !
பெம்மான் பக்தருக்கு இறங்கி வருவதுபோல்
வெள்ளமாய் சிரசில் விழும் பனித்துளிகள்
குருவினுடைய உபதேச ஆசிகள் போல்
வெள்ளமாய் தரையில் பால் ஓட்டம்
உடைய உம் வாசற்கதவை அடைந்தோம்
நிராயுதனான இலங்கை கோனிடம் கருணை
இளையோன் பரதனிடம் நெஞ்சார்ந்த
அளப்பறிய அன்பும் கொண்ட மனதுக்கினியானை
களிப்புடன் பாடியும் உறக்கம் விடவில்லையா ?
பெருந்துயில் விட்டு எம்முடன் சேருவாயாக "
பெரிதுவந்தோம் -பெரிதுவந்தோம் கிளிகள்
நாங்கள் அயோத்திராமன் மகிமை கேட்டு !!
Post a Comment