Dec 19, 2017

Tiruppavai 04 -- Andal appeals to Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. #watercolour #KrishnaforToday


1 comment:

Kalpakam said...

தாவி உன்னைத் தொடரும் இந்தப்
பச்சைக்கிளி வார்த்தை கேட்பாய்
கூவி அழைத்தால் ஓடிவருவான் -உன்
ஆவியில் கலந்தவன் கண்ணனவன்
சேர்ந்து வேண்டுவோம் மழை தேவதையை
வாரிதியில் உட்புகுந்து .நீரை முகந்து
ஆரவாரமுடன் வானில் பயணித்து
கரியவுரு கண்ணனின் கருமேனியெனத்
தோன்றி மகிழ்விப்பாயென வேண்டுவோம்
வேண்டுவோம் பரமனின் வலக்கரச் சக்கரம்
மின்னலென மிளிரட்டுமென வேண்டுவோம்
வேண்டுவோம் கரம் இடதில் ஏந்திய வலம்புரி
சங்கின் நாதம் இடியென முழங்க வேண்டுவோம்
சார்ங்கம் என வில்லில் புறப்படும் அம்புகளென
சரமாரியாக மழை பெய்ய வேண்டுவோம்
வேண்டுவோம் நாடும் நன்நலம் பெற்று
எங்கள் நோன்பும் நிறைவேற எம்பெருமானை
வேண்டுவோம் காலமாற்றத்திற்குக் காரணனை