A selection of drawings and paintings by Keshav
ஜதிபோட்டுப் பண் ணிசைத்துத் துள்ளித் துள்ளி நடைபோடும் பாவையேபுதினம் கண்ட மகிழ்வில் நானும்கிள்ளை மொழி பேசி பேசி மெள்ளமெள்ளத் தொடருவேன் உன்னையேசேர்ந்துபாடுவோம் -நாம்சேர்ந்துபாடுவோம்- அன்பு கிளியேகுறளுருவம் காட்டி,மாவுரு எடுத்துதிருவடியால் மூவுலகு அளந்தவனைப்பாடுவோம் சேர்ந்து பாடுவோம்உத்தமன் நாமம் பாடி,புனித நீராடிசித்தம் கலங்காது துதித்துப் பாடுவோம்செங்கதிர் நெற்பயிர்களிடையேதுள்ளும் மீன்களின் மகிழ்வுபோலசங்கடங்கள் தீர்த்து நிறைவாழ்வுஅருளுவோனைப் பாடுவோம்குருவின் திருவடி பற்றி ,நன்கு கற்றறியகுடம் நிறைப் பால் நிரப்பும் ஆநிரையெனபூர்ண ஞானம் பெறுவோம் எனப் பாடுவோம்நாடும் நலம் பெற மங்களம் அருளப் பாடுவோம்
Post a Comment
1 comment:
ஜதிபோட்டுப் பண் ணிசைத்துத் துள்ளித்
துள்ளி நடைபோடும் பாவையே
புதினம் கண்ட மகிழ்வில் நானும்
கிள்ளை மொழி பேசி பேசி மெள்ள
மெள்ளத் தொடருவேன் உன்னையே
சேர்ந்துபாடுவோம் -நாம்
சேர்ந்துபாடுவோம்- அன்பு கிளியே
குறளுருவம் காட்டி,மாவுரு எடுத்து
திருவடியால் மூவுலகு அளந்தவனைப்
பாடுவோம் சேர்ந்து பாடுவோம்
உத்தமன் நாமம் பாடி,புனித நீராடி
சித்தம் கலங்காது துதித்துப் பாடுவோம்
செங்கதிர் நெற்பயிர்களிடையே
துள்ளும் மீன்களின் மகிழ்வுபோல
சங்கடங்கள் தீர்த்து நிறைவாழ்வு
அருளுவோனைப் பாடுவோம்
குருவின் திருவடி பற்றி ,நன்கு கற்றறிய
குடம் நிறைப் பால் நிரப்பும் ஆநிரையென
பூர்ண ஞானம் பெறுவோம் எனப் பாடுவோம்
நாடும் நலம் பெற மங்களம் அருளப் பாடுவோம்
Post a Comment