Jan 14, 2016

29. Eternal servitude. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

  1. ஆலயமணி தேனோசை காற்றில் மிதந்துவர
    பாலலை பரந்தாமன் பாம்பணையிருக்கை அமர
    அலைமகள் மென்கரங்களால் பற்றி அருகிருக்க
    மலரணிமங்கை எழுவர் மாலவன் தன் சொந்தமென

    இருவர் வெண்சாமரம் வீச, லயித்து துதிசெய்ய ஒருத்தி
    மற்றொருத்தி இன்னிசை யாழோடு இழைந்து கீதமிசைக்க
    வேறோருத்தி பதும மலர்மென் அடிகள் தொழுதவாரிருக்க
    ஆழ்பக்தியோடு நாமமொன்றே நவிலும் இன்னொருத்தி
    எழில்மிகு புள்ளரையன் பதாகை தாங்கி பரவசமாய் பாட
    ஏயேழ் பிறவிக்குப் பிரியாமல் நிழலாய் த்தொடர வேண்டினர்

    எந்நேரமும் தன்னேரிலாத உம் அரவிந்தபதம் எங்கள்
    நினைவிலிருந்து நழுவாது தவநெறி வழி காட்டட்டும்
    வந்தனைசெய் அறியா
    தத்தையும் பணிந்தது காண்

    ReplyDelete