Jan 10, 2016

25. Eternal service to Krishna. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

  1. புனித சுடரொளி இருளில் சூழ
    நன்னல சோதியாய் மாறி சுழல
    சங்கு,சக்கரம் ஏந்திய கரமிரண்டு
    செங்கமலம்,கதையுடன் கையிரண்டும்

    ஒளிரும் மகுடம் மிளிரும் நுதல் திலகம்
    பெரு இரு விழி ஊற்றென பொழி கருணை
    நாதமோடு இழையும் பண் கீதமென
    இதழூடு இணைந்த இளமென் புன்னகை

    திண்தோள்கள் அணிந்த தோள்வளைகள்
    முரண்படு கரு மார்புத் தழுவும் மாலைகள்

    மெய்சிலிர்த்து கைகூப்பினாள் அன்னை தேவகி
    தன்னெதிர் அமுதமெய்பொருளாய் நிற்கும்
    அரங்கனாய் காட்சி தந்த உம்மைக் கண்டு
    வேண்டினாள் பால்மணம் மாறா பாலகனாய் மாற
    சிறையில் உதித்த நீர் மறைவிடம் சென்றீர்
    மறலி யாய் தொடரும் கம்சனுக்கு கூற்றனானீர்

    தயிர்கடையும் தருணமதில் காலை
    யசோதை அன்னை கழுத்தணைத்து
    உயிரைக் கடைவதுபோல் குலுக்கி
    தாழி வெண்ணெய் வேகமாய் தட்டுவீர்

    பிள்ளைப்பருவத்து உம் திருவிளையாடல்
    பாசுரமாய் அர்ச்சித்து பாடி கூடி மகிழும்
    எங்கள் குறை தீர்த்து உம் மார்புறையும்
    திருமகள் தக்க செல்வமும் அருளுவீராக

    ReplyDelete