Jan 9, 2016

24. MangaLAshAsana. 'Hail to Thee!' #Tiruppavai #krishnafotoday 

1 comment:

  1. சேர்ந்திசைத்தோம் நாம் உம் புகழை
    மறமெல்லாம் அறமாக்கும் உம் பதமலர் போற்றி

    குறளுருவம் தாங்கிப்பின்
    பேருருவம் வளர்ந்தோங்க-உம்
    அடிப்பதம் ஒன்றால் நீராட்ட
    அடைந்தார் புனிதம் விண்ணோர்

    தவநெறி தழுவிய தவசிகள் முதல்
    அறநெறி நழுவிய அறிவிலி வரை
    மருள் நீக்கி அருளால் புரந்தாய்
    மண்ணோர்க்கு அடிப்பதம் இரண்டால்

    மதியகம் தெளிந்த பலிக்கு
    பதவி தந்தாய் அடிபதம் மூன்றால்

    இலங்கையர்கோன் இனம் வென்ற
    திறல்மிகு உம் கோதண்டம் விட
    ஆழி நடு அணை கடந்த உம் மலர்பதம்
    அகம் எண்ண வினைதீர்க்கும் மருந்தாகும்

    பொல்லாத அவுணர் இருவரை பாலபருவத்தில்
    கொல்லாது விடவில்லை உம் பிஞ்சுகால்கள்

    கோவர்த்தனம் மலை ஏந்தி
    சினந்த இந்திரன் ஒடுக்கி
    மந்தைகள், மக்கள் காத்து நின்ற
    நெடுமாலே உம் பதமலர் போற்றி !!

    ReplyDelete