Dec 30, 2015

14. Pankajalochana. #Tiruppavai #krishnafortoday 

1 comment:

  1. அருண ஒளி எழுத் தோன்றலில்
    அருந்தவசிகள் மங்களசங்கு ஒலிக்க
    ஆலய மணிக்கதவம் தாள் திறக்க
    குவலயம் பனுவல் இசையாய் நிரம்ப

    புழக்கடைப்பொய்கையில் ஆம்பல் சாய்ந்திட
    சுழலும் நீரிடை பதுமமலர் அனறலர்ந்திட

    சொல்லில் வல்லவளே ஆயின்
    செயலில ஊக்கம் அல்லாதவளே
    இன்பவாய்மொழி பேசுபவளே ஆயின்
    சொன்னபடி செய்யா நாவுடையவளே
    முந்தி துயில்நீக்கி சேருவாய் எம்முடன்
    செந்தாமரைக் கண்ணன் துதிபாடுவோம்

    ReplyDelete