Dec 19, 2015

3. Realisation dawns. The Earth reveals itself. #Tiruppavai #krishnafortoday 

2 comments:

layeah said...

How beautiful is the little Andal 😍

Kalpakam said...

நிலம் சுழல நீரில் மீன் சுழல
வானில் நிறைமதி சுழல
சிறகடித்துப் புட்கள் வளைந்துவர
சுரைசெறிந்த ஆநிரை சுற்றி ஓட
வனம் நடுங்க, மரம் ஒடுங்க
கனிகள் குலுங்க,மலர் சிலிர்க்க
எண்திசை சுழன்றாட,ஏழுலகும் சுழல
குறளுருவம் மறைநாயகன் பேருருவமாகி
அங்கியில் ஓங்காரப்ரணவம் காட்டி
செவ்வரி படர்ந்த விழியில்
தண்நிறை கருணை காட்டி
இதழில் மென்னகை தவ்ழ
எழிலுரு நீள்நாமம் நுதலில்
திலகமாய் அலங்கரிக்க
திருச் செவிகளில் குண்டலம்
சிறு குழல்களாய் நெளிய
சிகையில் தோகையாய் கேசம் பறக்க
இடது திருவடி வானம் அளக்க
வலது திருவடி பாதாளம் மிதிக்க
ஓங்கியளந்த உத்தமனை
நெக்குருகி அகம் நெகிழ
பாங்குற பாசுரங்கள் பாடி
பக்கலில் நிற்கும் கோதை காண
நீங்காத செல்வம் நிறையும் காட்சி அன்றோ