முரண்படு நீல வண்ண கண்ணா அருகிருந்து உன் அருள் வேண்டி பாசுரம் இசைத்த கோதைக்கு ஈர்க்கும் இரு பெருவிழிகள் சுருள் கருமுடி மூடிய நுதல் நேர்பார்வையில் எள்ளும் நகை சிறுமணி குண்டலங்கள் ஆட அரும்பு பவழ மாலை அசைய திருவடி மடித்த அமர் கோலம் கூர்வேல்,கொட்டும் பறை கரங்களிரண்டும் பற்றிட சரணாகதி தத்துவம் காட்டினாயோ?
1 comment:
முரண்படு நீல வண்ண கண்ணா
அருகிருந்து உன் அருள் வேண்டி
பாசுரம் இசைத்த கோதைக்கு
ஈர்க்கும் இரு பெருவிழிகள்
சுருள் கருமுடி மூடிய நுதல்
நேர்பார்வையில் எள்ளும் நகை
சிறுமணி குண்டலங்கள் ஆட
அரும்பு பவழ மாலை அசைய
திருவடி மடித்த அமர் கோலம்
கூர்வேல்,கொட்டும் பறை
கரங்களிரண்டும் பற்றிட
சரணாகதி தத்துவம் காட்டினாயோ?
Post a Comment