Sep 8, 2015

Navneet Krishna. #krishnafortoday

1 comment:

Kalpakam said...

கரங்களில் வெண்ணைய் பந்தாய் ஏந்தி
பதம் தூக்கி ஜதிஆடும் அண்ணலே
அறிவிலா ஆய்ச்சியர் பூப்பந்தாட நடு
குதித்தாடிய நினைவு வந்ததோ கண்ணா
உறவாடி கழுத்தணைந்து காதலி ராதை
களிப்பாடிய எண்ணம் எழுந்ததோ கண்ணா
பரவசமாய் தன்னிலை மறந்து மீராவின்
இசைக்கு இணைந்தாடிய நினைவோ கண்ணா
பரிவோடு பூமாலை சூடிப்புனைந்த கோதை
பாக்களுக்கு தாளமிட்ட நினைவோ கண்ணா
சிரம் தாழ்ந்து அகத்தூடு பணியும் அடியேனின்
சென்னிமேல் உன் பதம் வைப்பாய் அருளாளா