Tiruppavai 07: wake up, dear, you’re glowing in Krishna anubhava — Come, you should lead us by singing the glories of Keshava, the Lord who killed the asura, Keshi.
செவியுற்றேன்-நானும்-செவியுற்றேன் புவியில் கிளியாய்ப் பிறந்த புண்ணியம் செவியில் இடையறா விழும் சுநாதங்கள் ஒருபக்கம் அணிவகுத்த குருவிகளின் பேரரவம் ஒரு பக்கம் பெண்டிர் வளையல்கள் குலுங்கும் கீதம் ஒரு பக்கம் கடையும் மத்தின் சீரான ஒலி அலைகள் ஒருபக்கம் காசுமாலை,அச்சு தாலி ஒன்றோடு உரச மந்திரம்,துதிகள் சேர்ந்ததொரு ராகப் பண்ணொலி ஒரு பக்கம் புரவி உரு அவுணன் கேசியைக் கொன்ற நாராயணமூர்த்தி நாமங்களின் ஆனந்த கானவொலி ஒரு பக்கம் தோழி துயில் எழுப்பப் பொழுதுவிடியல் அறிவுறுத்தும் பாவைகளின் அழைப்பு அமுதக்குரல் புனிதமானேன்-புனிதமானேன்-நானும் புவியில் கோதையின் தோள் உறவால் புனிதமானேன்-புனிதமானேன்-நானும்
1 comment:
செவியுற்றேன்-நானும்-செவியுற்றேன்
புவியில் கிளியாய்ப் பிறந்த புண்ணியம்
செவியில் இடையறா விழும் சுநாதங்கள்
ஒருபக்கம் அணிவகுத்த குருவிகளின் பேரரவம்
ஒரு பக்கம் பெண்டிர் வளையல்கள் குலுங்கும் கீதம்
ஒரு பக்கம் கடையும் மத்தின் சீரான ஒலி அலைகள்
ஒருபக்கம் காசுமாலை,அச்சு தாலி ஒன்றோடு உரச
மந்திரம்,துதிகள் சேர்ந்ததொரு ராகப் பண்ணொலி
ஒரு பக்கம் புரவி உரு அவுணன் கேசியைக் கொன்ற
நாராயணமூர்த்தி நாமங்களின் ஆனந்த கானவொலி
ஒரு பக்கம் தோழி துயில் எழுப்பப் பொழுதுவிடியல்
அறிவுறுத்தும் பாவைகளின் அழைப்பு அமுதக்குரல்
புனிதமானேன்-புனிதமானேன்-நானும்
புவியில் கோதையின் தோள் உறவால்
புனிதமானேன்-புனிதமானேன்-நானும்
Post a Comment