வினதாசுதன் வாகனம் அமர்வோன் ஆலயமணி நாதமோடு வெண்சங்கொலி சேர பூதனை சகடாசுரனைக் கொன்றவனை பாலலை பாம்பணைத் துயில் பரமனை வேதியர், மறைமாமுனிகள் சித்தம் ஒன்றாகி மெல்ல மெல்ல எழுந்து ஹரி என்ற நாமம் ஓதும் நல்லொலியெல்லாம் செவியேற்று போதும் உன் உறக்கம் கலைந்து உணர்வாய்
1 comment:
கேள்வாய் கேள்வாய் பிள்ளாய் -உம்
தோழி சொல் கேள்வாய்
ஆழ்துயில் அறியாமை விட்டு-விரைவாய்
எழுவாய் எழுவாய் மகளே
கிள்ளைமொழிதான் என்றெண்ணி-நீ
தள்ளிவிடாதே-தள்ளிவிடாதே
வினதாசுதன் வாகனம் அமர்வோன்
ஆலயமணி நாதமோடு வெண்சங்கொலி சேர
பூதனை சகடாசுரனைக் கொன்றவனை
பாலலை பாம்பணைத் துயில் பரமனை
வேதியர், மறைமாமுனிகள் சித்தம் ஒன்றாகி
மெல்ல மெல்ல எழுந்து ஹரி என்ற நாமம்
ஓதும் நல்லொலியெல்லாம் செவியேற்று
போதும் உன் உறக்கம் கலைந்து உணர்வாய்
Post a Comment