Jan 6, 2016

21. The preceptor. #Tiruppavai #krishnafortoday

1 comment:

  1. மீனாவதாரத்து மகிமைக்கோர் அளவில்லை
    நான்மறை அழியா காத்து அருளினீர்
    பாற்கடலில் அமுதுகடைய
    கூர்மாவதாரமாய் மலை சுமந்தீர்
    இரணியனை அடிததுக் கொன்றீர்
    வராஹனாய் வந்தீர் பூமி அன்னை காத்தீர்
    நரஹரியாய் தரணியில் அவதரித்தீர்
    தூணிலிருந்து வந்தீர் பக்தனுக்கருள
    வாமனனாய் வந்தீர் மூவடி அளக்க
    மாவுரு எடுத்து பலிக்கு பதவி தந்தீர்
    செருக்கோடு சினம்சேர் பரசுராமரானீர்
    க்ஷத்திரகுலமதை பூண்டோடொழித்தீர்
    இராமவதாரம் எடுத்தீர் கோதண்டமேந்தி
    இலங்கைகோன் அரக்கர் மரபழித்தீர்
    ரோகிணிமைந்தன் பலராமனாய் உதித்தீர்
    யசோதை மகனாய் லீலைகள் புரிந்தீர்
    கலியில் கல்கிரூபனாய் தோன்றி
    கலகம் தீர்த்துக் களிப்படைய செய்வீர்

    அதிமதுர பாலமுதமாய்ப்பொழியும்
    ஆவினம் போல் அருளுவீர் ஞானம் !

    பல்லாண்டு பாடி வந்தோம் குழாமுடன்
    அண்ணலே ஆதிமூலமே துயிலெழாய்


    ReplyDelete